தமிழகத்தில் ஒமைக்கிரான் பிஏ5 பாதிப்பு

 

தமிழகத்தில் மொத்தம் பதிவாகி வரும் கொரொனா பாதிப்பில் 25% வரை புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்கிரான் பிஏ5 பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.  இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும், ஆலோசனைகளையும் அதிகாரிகளுடன் நடத்தி வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குழு பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மூன்றாவது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஓமைக்கிரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் எட்டு வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஓமைக்கிரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு அதிகப்படுத்த உள்ளதாக  சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!