தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் உள்பட உதவியாளர்கள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கின்றார். அப்போது நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி பயணத்தை முடித்து கொண்டு இன்று இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்னை திரும்புகிறார்.