தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டில் 20 ஆண்டுகளுக்கான சாதனைகளை நிறைவேற்றியுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து தனது புதிய அமைச்சரவையை அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில்ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருடன் மேலும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது.