ஒற்றை தலைமை வேண்டும் – 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை – புதிய பொதுக்குழு தேதியை அறிவித்தார் அவைத்தலைவர்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்..தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமான சிவி சண்முகம் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை வாசித்தார் சி.வி.சண்முகம்…
அதில், இரட்டை தலைமையால் கடுமையாக திமுகவை எதிர்த்து செயல்பட முடியாமல் உள்ளதாகவும், இரட்டைத் தலைமையால் ஒருங்கிணைப்பு இல்லாமல் செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர் என்றும், நூற்றாண்டு காலம் அதிமுக நீடிக்க எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்ற ஒற்றைத்தலைமையை எற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இப்பொதுக் குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்தி கோரிக்கை விடப்படுவதாக தெரிவித்த அவர், இப்பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக் குழுவிற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..
அதனை தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், ஒற்றை தலைமை கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் அதிமுகவின் நலன் கருதி,ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என கூறினார். இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து கோஷங்கள் எழுப்பினர்.