ஒரு சில பெண்கள் மட்டுமே மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தால் ஈர்க்கப்பட்டு குழந்தை பெற்று கொள்ள விரும்புவதில்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், நவீன கால பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை எனவும், அவர்கள் வாடகை தாயை நாடுவதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது பெண்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ள பாஜக தலைவர், மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம் காரணமாக ஒரு சில பெண்கள் தனியே வாழ விரும்புவதாக கூறினார். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை போல் அல்லாது, குடும்ப உறவுகள் மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.