மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இக்குழு உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், 85.7 சதவீத விவசாய அமைப்புகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்ட விலையில் பயிர்களை கொள்முதல் செய்வதை மாநிலங்களிடமே விட்டுவிடவும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை ரத்து செய்யவும் இக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 73 விவசாய அமைப்புகளிடம் இக்குழு கருத்து கேட்டிருந்த நிலையில் அதில் 61 அமைப்புகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது.