பி.எம் கேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்தனர். இதையடுத்து, இந்த நிதி தொடர்பான சந்தேகங்களை, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பி.எம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் வரும் பணம் தவறாக பயன்படுத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.