இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐத் தாண்டியதை பாஜக-வின் சாதனையாக கொண்டாடுங்கள் மோடி என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரான ப.சிதம்பரம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது, சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் ரூ.1000-ஐத் தாண்டிவருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதை சாதனையாக கொண்டாடியது போன்று, இதையும் கொண்டாடுங்கள் மோடி என தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி அவரது அமைச்சர்களைக் கொண்டு 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டியதைக் கொண்டாடினார்.
அதேபோல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரு.1000ஐ தாண்டியதும் இன்னொரு நல்ல வாய்ப்பாக நினைத்து அதையும் கொண்டாடலாமே” என்று பதிவிட்டுள்ளார்.