டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நேற்று நடைபெற்ற குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் 33 ரன்களுக்கும், பாபர் ஆசம் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பின் 18 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.