நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 17ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் மழைகாரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, எனவே நீட் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டனர்.
அப்போது தலைமை நீதிபதி, எத்தனை முறை தான் தேர்வை ஒத்திவைக்கக்கோரி மனு தாக்கல் செய்வீர்கள், ஏற்கனவே இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி தானே செய்யப்பட்டன ? என வினவினார்.
அதற்கு வழக்கறிஞர்கள், தற்போது பல மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும் உள்ளன எனவே 17ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினர். வழக்கை நீதிபதி சந்திரசூட் அமர்வில் பட்டியலிட உச்சநீதிமன்றம் பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.