பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி?

நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அதன் நிலை என்ன? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒரே வாரத்தில் ஆளுநர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருக்க முடியும் எனவும், மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாவுக்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!