மக்களுக்காக உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகள்… டிஜிபி

மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ காவல்துறை அதிகாரிகள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலந்திரபாபு தெரிவித்துள்ளார் .

சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, தமிழக காவல்துறையின்  டி.ஜி.பி.  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். காவலர் வீரவணக்க நாளையொட்டி உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 132 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பொது அமைதி நிலைநாட்ட உயிர் தியாகம் செய்த 377 காவலர்களுக்கு ஒரு சில மணிதுளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து நிகழ்வில் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலந்திர பாபு, மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ காவல்துறை அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!