பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்பு.

ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பு.

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பும் தேர்வை நடத்தியது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,148 நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் TNPSC நடத்தும் தேர்வில் உள்ளது போல தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!