‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தின் கனவும் படமான இது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னை ட்ரேட் சென்டரில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழில் சூர்யா, தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன் லால், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, இந்தியில் அமிதாப் பச்சன் ஆகியோர் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!