மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

 

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலத்திற்குள் 80 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சிக் கோட்பாடு நிலை பெறவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு, மக்கள் அளித்துள்ள பேராதரவை இது பறை சாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் பயணத்திற்கு, உள்ளாட்சித் தேர்தல் வெற்றி ஒரு ஊக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்,

 

Translate »
error: Content is protected !!