உத்தரபிரதேசத்தில், ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சித்தார்த் நகர், எடாஹ், ஹர்டோய், பிரதாப்கர், பதேபூர், டியோரியா, காசிப்பூர், மிர்சாபூர், ஜாவ்ன்பூர் ஆகிய 9 இடங்களில் இந்த மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.