டெல்லியின் 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் நடைமுறை வரும் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ஆம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என மூன்றாக பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, 3 மாநகராட்சிகளும் பாஜக-வின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.3 மாநகராட்சிகளிடையே வருவாயில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. வார்டுகளும் சமமாக பிரிக்கப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கான டெல்லி மாநகராட்சி திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் டெல்லியின் 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் நடைமுறை வரும் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.