சென்னை மருத்துவக் கல்லூரியில் இரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மந்திரம் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
சென்னை மருத்துவக் கல்லூரியில் இன்று 3 பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது 187 ஆண்டு கடந்த பழமையான கல்லூரி. இது ஆசியாவின் மிகப்பெரிய பழமையான 2 வது கல்லூரி எனவும், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி உட்பட தமிழுக்கு பெருமை சேர்ந்தவர்கள் பலரும் பயின்ற கல்லூரியாக இந்த கல்லூரி திகழ்கிறது. இங்கு படித்தவர்கள் உலக அளவிலும் புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கின்றனர் என்று கூறினார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மருத்துவமனைக்கு நான் வந்திருக்கிறேன் அதற்கு முன்பு அடிக்கடி இங்கு வந்துள்ளேன் அதற்கு காரணம் அப்போது இது சிறைச்சாலையாக இருந்தது. 10 க்கும் மேற்பட்ட முறை இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றுக்காக சிறையில் இருந்திருக்கிறேன் என்றும், முதல்வர் ஸ்டாலின் 1 ஆண்டு காலம் இந்த சிறையில் தான் இருந்தார் என்றும், தற்போது ஏராளமான மருத்துவர்கள் இங்கு பயின்று சிகிச்சை அளிக்க செல்லும் இந்த மண் புனித மண் தான் எனவும் கூறினார்.
நான் இதுவரையும் 63 முறை இரத்த தானம் செய்துள்ளேன், தற்போது 62 வயதாகிறது. இரத்த தானம் செய்வதில் ஆர்வம் அதிகமாக கொண்டவர்கள் பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் தமிழகம் முதலிடத்தில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.
இதுவரை நடந்த மாணவர்கள் பேரவை நிகழ்ச்சிளை விட முன்மாதிரியாக இந்த கல்லூரியில் மாணவி, மாணவர் மன்ற தலைவராக இருக்கிறார். இது மகிழ்ச்சியான ஒன்று எனவும், கொரோனா பாதிப்பு காலங்களில் தற்போது 4 வது அலையாக இது இருக்குமோ என்று நினைக்கும் வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1500 க்கும் கீழ் தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையாக பல நாடுகளில் தொற்று 24 மணி நேரத்தில் அதிகரித்து வருகிறது என்றும், அதிகமான மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் எனவும், தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டத்தில் இன்னும் 6 மருத்துவ கல்லூரிகள் வேண்டும் எனவும் மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் தெரிவித்தோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சு:
இங்கு 341 மாணவர்கள் ஒரே நேரத்தில் இரத்த தானம் செய்து இருக்கிறார்கள் என்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,3 மடங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் ஆனால் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை படிபடியாக தான் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு நாள் ஒன்றுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தற்போது செய்துய் வருகிறோம் என்றும் சென்னையில் 207 தெருக்களில் 3க்கும் மேற்பட்டவர்கள், 187 தெருக்களில் 5 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகவும் கூறிய அவர் சென்னையில் 51 பேர் அரசு மருத்துவமனையிலும், 85 பேர் தனியார் மருத்துவமனையிலும் என 136 பேர் மொத்தமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும் கூறினார். முக கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து 30 சதவீதம் அணிந்து இருப்பதாக கூறினார்.
தொடர்ச்சியாக, தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த விதி விலக்கும் அறிவிக்கப் படவில்லை என்றும் தற்போது சென்னையில் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் நாளை மயிலாப்பூர் லஸ் கார்ணரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 50,000 பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், நானும் துறை செயலாளரும் கலந்து கொள்கிறோம் என்றார். மேலும், மருத்துவ கழிவுகளை மருத்துவமனையில் கொட்ட கூடாது மருத்துமனை நிர்வகத்திடம் கேட்ட போது மறுப்பு தெரிவிக்கிறார்கள் ஆனால் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொள்ள செல்கிறோம் என்றார்.
நாளை மருத்துவ சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து கேட்டதற்கு ஒரு சில மருத்துவ சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருப்பதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார், அரசுக்கும் மருத்துவ சங்கங்களுக்கும் இடையேயான பிரச்சனை இது கிடையாது மருத்துவ சங்கங்களுக்குள் நடைபெறும் பிரச்சனை இது என்றார். ஏற்கனவே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட எம்.ஆர். பி பணி வழங்க இருப்பதாகவும், அதிலும் கொரோனா காலகட்டத்தில் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.