மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

வங்கி தேர்வில் தமிழுக்கு வாய்ப்பளிக்காத மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கித் தேர்வுகளில் தமிழுக்கு இடம் இல்லாததை கண்டித்தும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய  அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு பேசியபோது :

மத்திய அரசின் அலுவலகங்களிலும் வங்கிகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆனால் தற்போது அகில இந்திய தேர்வு என்ற நிலையை கொண்டு வந்து பீகார் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது என தெரிவித்தனர.

 

Translate »
error: Content is protected !!