பாஜக-விற்க்கு எதிராக கண்டன முழக்கம் – சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

 

ஆகஸ்ட் 9-ஆம் தேதி மத அரசியலை செய்கின்ற பாஜக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டுமென கண்டன முழக்கம்  என சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறுகின்ற அவலங்களை சரி செய்ய வேண்டும் என்பதற்காக  கண்டன முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில சிறுபான்மை நல வாரியத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் துணைச் செயலாளர் வன்னியரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் இந்திய முஸ்லிம் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர் அதனை தொடர்ந்து சிறுபான்மை நலத் துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்து,

”பாஜக அரசானது சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது அவர்களின் உரிமை சிதைக்கும் வகையில் தொழில் பாதிக்கும் வகையிலும் தொடர்ந்து அவர்களுக்கு இடையூறு கொடுத்து வருகிறது.  அதனுடைய அடுத்த கட்டம்தான் ஒரு தொலைக்காட்சியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நபிகள் நாயகத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவு செய்திருக்கிறார் இதனால் எதிர்மறையான விளைவுகளை உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் உலக அளவில் கண்டனங்கள் எழுகின்றன நபிகள் நாயகத்திற்கு எதிராக பேசிய உண்மைக்கு புறம்பான கருத்துக்கு எதிராக உலக அளவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது குறிப்பாக வளைகுடா நாடுகளில் கூட கண்டனம் அதிகரித்து இருக்கிறது, இதனால் நமது மண்ணில் இருந்து வெளியே பிழைக்கச் சென்ற மக்களுக்கான வாழ்வாதாரம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது அங்கே வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த கருத்துக்கு எதிராக தற்போது கண்டன முழக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினோம்.

ஏதாவது ஒரு இடத்தில்  எல்லாரும் சிறுபான்மையினராக இருந்தாகவேண்டும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் யாரோ ஒருவர் ஒரு இடத்தில் சிறுபான்மையாக இருந்தாக வேண்டும். மத சிறுபான்மையாக இருந்தாலும் இன சிறுபான்மையாக இருந்தாலும் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள் சிறுபான்மையின ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக நாடு. இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் பிரதமர் மோடி அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக அப்பாவி பொதுமக்களை அதாவது எந்தப் பாதுகாப்பும் இல்லாத  சிறுபான்மையினரை எதிரிகளாக சித்தரித்து அவர்களுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது இந்த பாரதிய ஜனதா ஆட்சி.

எனவே ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியா முழுக்க கொண்டாடப்படுகிற நாள் இந்த நாளை மத அரசியலை செய்கின்ற பாரதிய ஜனதா வெளியேற வேண்டுமென முழக்கமிட இருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஆர்.முத்தரசன் கேட்டதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!