முதுநிலை நீட் தேர்வுக்கும் தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட வேண்டும்

முதுநிலை நீட் தேர்வுக்கும் தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு, திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளநிலை நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை அண்மையில் வெளியிட்டு, திருத்தங்கள் இருப்பின் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. இதுபோல், NEET – PG தேர்வுக்கும் தேசிய தேர்வு வாரியம், Answer Key வெளியிட்டு திருத்தங்கள் இருப்பின் அதை பதிவு செய்ய அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் ட்விட்டரில் எம்.பி. வில்சன்கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!