பட்டாசு வெடிப்பது சரியா? குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…

பட்டாசு குறித்து குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது மக்களின் வழக்கம். ஆனால் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கருதி கடந்த 2018ம் ஆண்டு முதல் பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைகாக பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு பின்பற்றும் என்றும், பட்டாசு தொடர்பாக குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு மூலம் குறைந்தபட்சம் 20% பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!