நேபாளத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வதை சர்ச்சையாக்கி வந்த எதிர்கட்சிகள் அதுகுறித்து விளக்கம் கேட்ட வண்ணம் உள்ளன. இந்தநிலையில் தோழியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி நேற்று நேபாளம் புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் காத்மண்டுவில் அவர் கேளிக்கை விடுதி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை வைரலாக்கி வரும் எதிர்கட்சியினர் அவரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.