காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்தாண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பணிகளை நடைபெற்று வருவதால் காங்கிரசின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
அப்போது முதல் இடைக்கால தலைவராக சோனியா பதவி வகிக்கிறார். அவருக்கும் உடல் நல பாதிப்பால் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதனால், ராகுல் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுலைப் பொறுத்த வரையில் இன்னமும் அவரது மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை என இவர்களில் சிலர் கூறுகின்றனர். எனவே, தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்ச் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் தொண்டர்களின் விருப்பம். கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.