பச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் 44 லட்சம் 9.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மிழகம் முழுவதும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உட்பட மூன்று நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 44 லட்சம் 9.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 100 கோடி கணக்கில் வராத வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தனியார் சிட் பண்ட் நிறுவனம் தொடர்பான சோதனையில் 1.35 கோடி ரொக்கமும் 7.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 150 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானமும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சிட் பண்ட் நிறுவனம் குறித்து பதிவு செய்யாமல் கடந்த சில வருடங்களில் 4 கடந்த சில வருடங்களில் 400 கோடி ரூபாய் அளவு சம்பாதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.