ரஜினி – நெல்சன் படத்தில் இணையும் கன்னட ஹீரோ?

 

ரஜினி 169 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படம் டிராப் ஆகி விட்டதாக கூட சமீபத்தில் தகவல் பரவியது. நெல்சனின் பீஸ்ட் படம் பிளாப் ஆனதால் தான் இப்படி ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இறுதியில் ரஜினி நெல்சன் உடன் கூட்டணியை முறிக்கவில்லை, படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது ஷூட்டிங் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குனர் மும்முரமாக செய்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் நெல்சன் பெங்களூரு சென்று அவருடன் பேச இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

Translate »
error: Content is protected !!