ரமலான் பண்டிகையையொட்டி, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை, நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற மதத்தினருக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சகோதரத்துவத்தை போற்றும் இந்திய பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு எல்லையில் இனிப்புகளை வழங்கினர். இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள அட்டாரி எல்லைப் பகுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தனர். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.