தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் மற்றும் உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய மேலும் 6 ஈரநிலங்கள், தற்போது ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ள முதலமைச்சர், இந்தச் சிறப்பான சாதனைக்காக தமிழக வனத்துறைக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்