நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்

 

நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், பொது மக்களை பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக நியாய விலைக்கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு “No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி, அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும், கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!