போக்சோ மற்றும் ஊழல் வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்காமல் இருப்பதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வரும்படி தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழக பேரூராட்சிகளில் பணியாற்றியவர்களில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு நடவடிக்கை, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆர். பெரியசாமி விவரம் கேட்டிருந்தார். இதேபோல் போக்சோவில் கைதானவர்கள் விவரம் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் கேட்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் மாநில தகவல் ஆணையம் முன் நடைபெற்றது.
இதனை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ் . முத்துராஜ், லஞ்சம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குள்ளாகும் அரசு ஊழியர்களுத்து சஸ்பெண்ட் காலத்தில் பிழைப்பூதியம் வழங்கப்படுவதாக கூறினார். மேலும் குற்றம் செய்தவர்களுக்கு சஸ்பெண்ட் காலத்தில் பிழைப்பூதியம் வழங்காமல் இருக்க பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் ஆணையர் முத்துராஜ் தனது உத்தரவில் கூறினார்.