தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 150648 பேரில் 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித் துறை ஆணையர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படாத நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதை எதிர்த்து ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க மீண்டும் அறிவுறுத்தி, வழக்கு ஜீலை 15க்கு தள்ளிவைக்கக்கோரி நீதிபதி டி.கிருஷ்ணகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.