நியாயமற்ற காரணங்களுக்காக அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் 23 ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டு இன்று பிற்பகல் மூன்று மணியுடன் வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரம் முடிவடைந்தது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகத்துருக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு வார்டுகளில் அதிகமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. அதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிசிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உடப்பட்ட ஒரு வார்டில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நடப்பாண்டு நியாயமற்ற முறையில் திமுக ஊராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் நியமாற்ற காரணங்களுக்காக அதிமுக வேட்பாளர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்தாக குற்றம்சாட்டினார்.