7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பு

 

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள்‌ தாக்கல் செய்த திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

இதில் அதிமுக சார்பாக சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும் திமுக சார்பாக கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பாக  ப.சிதம்பரமும் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்..இதே போல் சுயேட்சைகள் 7 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிடுவோரை 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன் மொழிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அறையில் நடைபெற்ற வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரீசிலனையில், திமுக 3, அதிமுக 2, காங்கிரஸ் கட்சி 1 என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.வேட்புமனுக்களை திரும்பப் பெற 3ம் தேதி கடைசி நாள்.. மாநிலங்களவை தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் 6 பேர் வரும் 3ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

 

Translate »
error: Content is protected !!