இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்ப இருந்த நிலையில் கடைசி நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சனிக்கிழமை ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவ இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.