இயற்கை எரிவாயு விலை உயர்வு

டெல்லியில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு கிலோ 66 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு சுமை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. டெல்லியில் இருதினங்களுக்கு முன்பு இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி டெல்லியில் இதன் விலை இன்று முதல் கிலோவுக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டு கிலோ ஒன்றுக்கு 66 ரூபாய் 61 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில், இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு 69 ரூபாய் 18 காசுகளாகவும், குருகிராமில் ஒரு கிலோ 74 ரூபாய் 94 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!