அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை- மக்கள் அதிருப்தி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளது. அந்தவகையில் சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 76 காசுகள் அதிகரித்து 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!