மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்

10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பி.டி.ஆர். விளக்கமளித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக ஐடிஐ அல்லது டிப்ளமோ போன்ற படிப்புகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்? பொருந்தாதா? என கேள்வி எழுந்தது.

இது  தொடர்பாக பெற்றோர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நிதியமைச்சர் பதிலுரையில் அதற்கான விளக்கத்தை அளித்தார்.

அதன்படி, அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு நேரடியாக  ஐடிஐ டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் எனவும், மற்ற மாணவிகள் போல் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்றும், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!