உக்ரைனில் கூலிப்படைகளை களமிறக்கும் ரஷ்யா

 

அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொலை செய்ய கூலிப்படைகளை ரஷ்யா தொடர்ந்து அனுப்பி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,   பிஎம்சி வாக்னர் என முன்பு அழைக்கப்பட்ட தனியார் ராணுவ நிறுவனமான ‘லிகா’வின் உரிமையாளரான யெவ்ஜெனி பிரிகோஜினுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு வரத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரிகோஜின் ரஷ்ய அதிபருக்கு நெருக்கமானவர் என்பதுடன் அமெரிக்காவின் தடைப் பட்டியலிலும் இடம்பெற்றவர் ஆவார். கூலிப்படையின் முக்கிய குறியாக அதிபர் ஜெலன்ஸ்கி,  பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் உள்ளிட்டோர் இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.

முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் கூலிப்படைகளை ரஷ்யா தொடர்ந்து களமிறக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!