உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டம், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை அழிக்கும் முடிவு என்றும் நேட்டோவுடன் நேரடிப் போருக்கு வழி வகுத்து விடும் என்று ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்ப உள்ளதாக ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஸ்சோல்ஸ் கூறியிருப்பதற்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே தாங்கள் வழங்கும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம் என உக்ரைன் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.