ரஷ்ய அதிபர் புதின் ஆவேசம்

 

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அனுப்பிய சமாதானத் தூதரிடம், நான் அவர்களை அடிப்பேன் என்று சொல்லுங்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் ஆவேசம் காட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்ய தன்னார்வலரான ரோமன் அப்ரமோவிச் என்பவர் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று அதிகாரப்பூர்வமற்ற சமாதானப் பேச்சுவார்த்தை ஒப்புக் கொண்டு புதினை சந்தித்ததாகவும், அவர் கொண்டு சென்ற கடிதத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உக்ரைனின் நிபந்தனைகள் விவரிக்கப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது. அப்போது தான் உக்ரைனை அடிப்பேன் என்று சொல்லுங்கள் என்று புதின் கூறியதாகத் தெரிகிறது.

இந்தநிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!