உச்சி மாநாடு உணவு பட்டியலில் ரஷ்யாவின் சாலட்…

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் உள் அரங்க உணவகத்தின் உணவுப் பட்டியலில் ரஷ்ய சாலட் இடம்பெற்றிருந்தது சர்வதேச அதிகாரிகளையும் செய்தியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவே நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் அங்கிருந்த உணவகத்தின் மெனு பட்டியலில் ரஷ்ய உணவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது நகை முரணாக இருந்தாலும், சுவை மிக்க அந்த உணவு சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஸ்பெயின் சமையல்காரர்களால் உக்ரைன் சாலட் என்ற பெயரிலும் உணவு பரிமாறப்பட்டது.=சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் கடந்த பத்தாண்டுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் உள்நாட்டுப் போராக மாறி உலக அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. தற்போது வரை மோதல் நீடித்து வரும் நிலையில், இதுவரை 3 லட்சத்து ஆறாயிரத்து 887 பேர், கொல்லப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமை ஆணைய செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி தெரிவித்துள்ளார். பல லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார். உயிரிழப்புகளை பொறுத்தவரை நேரடியாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் இது என்றும் உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார சீர்கேட்டால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!