வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி அமோகம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி பணி விறுவிறுப்படைந்துள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கிய நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம் தப்பி இருமுறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்திப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இரு மாதங்கள் தாமதம் என்றாலும் ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் என்ற உப்பு உற்பத்தி இலக்கை எட்டி விட வேண்டும் என்று உப்பளத் தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!