திருத்தணியில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரியாக மூடப்படாததால், பள்ளி வாகனம் பள்ளத்தில் சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி சாலையில் 116 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் பணிக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பைப்லைன் பதிக்கப்பட்ட பிறகு, தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாத நிலையில், பள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம் கவிழும் நிலை ஏற்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் வாகனம் நிறுத்தப்பட்டதால், அதிலிருந்த 50 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகனம் ஜே.சி.பி. மூலம் மீட்கப்பட்டது.