சீல் வைத்ததாக செய்திகள் – நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மறுப்பு

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததாக செய்திகள் வெளியான நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. பண மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா காந்தி இயக்குநர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் லக்னோவில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை நேற்று சீல் வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தகவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடகங்களுக்கு அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!