’மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சீசன் நிலவும்.
இதேபோல் செப்டம்பர் 2வது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை 2வது சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.
பாம்பார் அருவி, வெள்ளிநீர்வீழ்ச்சி, பைன்மரக்காடுகள், மோயர்பாயிண்ட் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.