நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 1000-க்கும் மேற்பட்ட கடைகளை
அடைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர
அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் இன்று நெல்லிக்குப்பம் நகராட்சி முழுவதும்
உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சொத்து வரி உயர்வினால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில்
இருந்தது அக்கால கட்டங்களில் எந்தவிதமான வியாபாரமும் இல்லாமல் கடைகள்
அடைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பெரும்பாலான வணிகர்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வரும் வேளையில் வணிகப் பயன்பாட்டிற்கான சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட காரணத்தினால் சாலைகள் அனைத்தும் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.