சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள டி எஸ் சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பவர் டி.எஸ். சிவஞானம் இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற பின்னர் 2011ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அண்மையில் மத்திய அரசுக்கு மூலமாக குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தற்போது, சிவஞானத்தை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய சட்டத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.