ரஷ்யாவிற்கு எதிரான ஆறாவது சுற்றுத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

 

ரஷ்யாவிற்கு எதிரான ஆறாவது சுற்றுத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ரஷ்ய எண்ணெய்க்கு பகுதி தடை மற்றும் உயர் வங்கியான ஸ்பெர் பேங்கிற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தொடர் மறுப்பு காரணமாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதில்  ஹங்கேரிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா தெரிவித்துள்ளார்.

தடைகள் உடனடியாக அமலுக்கு வருவதால் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு ரஷ்ய பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். இதனிடையே ரஷ்யா மீது பல புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பங்கள் அல்லது மென்பொருளை ரஷ்யா பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!