தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரிப்பு

 

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் வரையிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 5000 யில் இருந்து 40,000 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்துவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் 54.71 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1.40 கோடி பேரும் செலுத்தாமல் இருக்கிறார்கள்.  ஆகையால், தமிழக அரசின் கையிருப்பில் 1.29 கோடி தடுப்பூசி உள்ளது, அது செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆக இருக்கும் நிலையில் பொதுமக்கள் உடனடியாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை  இயக்குனர் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!