தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு கடந்த ஒரு மாத காலமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களில் தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான பொது மக்கள் முக கவசம் அணிவதை முழுமையாக தவிர்த்து இயல்பு நிலையில் உள்ளனர், எனவே தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் முறையாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.